சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எளிய மக்களின் உரிமைகளை காக்கும் அரசாக திமுக உள்ளது என கூறினார்.
சென்னை பெரம்பூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த கிறிஸ்துமஸ் விழாவை நாம் தொடர்ந்து கொண்டாடி வருகிறோம். திராவிட மாடல் அரசு என்பது எந்த மதத்தினுடைய நம்பிக்கைகளுக்கும் எதிரானது அல்ல.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்றைக்கு மதத்தின் பெயரால் அரசியல் நடத்தி பிழைக்கலாம் என்று நினைக்கக் கூடியவர்களுக்கு மத்தின் பெயரால் வன்முறையைத் தூண்டி அதிலே லாபம் பெறலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கக் கூடியவர்களுக்கு எதிரான அரசு தான் இன்றைக்கு உங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. மனிதநேயத்தி வளர்ப்பது தான் திராவிடத்தினுடைய கொள்கை.
ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்பது தான் திருமூலர் வாக்கு அதை தான் திராவிட
முன்னேற்ற கழக பார்வையாக அண்ணா முன்வைத்தார். ஏழைகள் ஒரு துளி கண்ணீர் விட்டால் அதை துடைக்க வேண்டிய கைகளாக திமுக அரசு இருக்க வேண்டும். எளிய மக்களின் உரிமைகளை காக்கும் அரசாக திமுக அரசு உள்ளது.
அமைச்சர் சேகர் பாபு கிறிஸ்துமஸ் பண்டிகை மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் ரம்சான் பொங்கல் விழா நடத்துகிறார். கொளத்தூர் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்திலும் நடைபெறும் விழாவுக்கு எடுத்து காட்டாக உள்ளது. கிறிஸ்துவ நிறுவனங்கள் கல்விக்கு செய்துள்ள பணியை எவராலும் மறுக்க முடியாது. நானும் கிறிஸ்துவ நிறுவனத்தில் தான் படித்தேன் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மருத்துவ துறையிலும் கிறிஸ்துவ நிறுவனங்களின் பணிகளை மறைக்க முடியாது. இன்று இந்தியாவிலேயே மிக சிறந்த மருத்துவ கட்டமைப்பு கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம், திமுக அரசு,ஒரு கோடி கணக்கான மக்களுக்கு வீடு தேடி சென்று மருத்துவம் வழங்கியுள்ளது என்று கூறினார்.
இறுதியில் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய முதலமைச்சர் வருகின்ற புத்தாண்டு ஒளிமையமாகஅமையட்டும் என வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்