33 C
Chennai
May 14, 2024
முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி எடுத்த வீரர்கள் விவரம்

ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  ரஹானே, பென்ஸ்டோக்ஸ் உள்ளிட்ட 6 வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.

16-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐபிஎல் வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த ஏலத்தில் சென்னை அணி எடுத்த வீரர்கள் முழு விவரம்:

ரஹானே

ஐபிஎல் மினி ஏலத்தில் முதல் வீரராக, இந்திய வீரர் ரஹானேவை அடிப்படை தொகையான ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது. கடந்த தொடரில் இவர் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸை வாங்கும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் மும்முரம் காட்டியது. இறுதியில் இங்கிலாந்தின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

ஷேக் ரஷீத்

ஆந்திராவை சேர்ந்த 18 வயதான ஷேக் ரஷீத்தை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

நிஷாந்த் சிந்து

ஹரியானவை சேர்ந்த நிஷாந்த் சிந்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார். இவரை இறுதியில் ரூ. 60 லட்சத்திற்கு சென்னை அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

கைல் ஜேமிசன்

நியூசிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜேமிசனை, அடிப்படை தொகையான ரூ.1 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

அஜய் மண்டல்

சத்திஸ்கரை சேர்ந்த ஆல்-ரவுண்டரான அஜய் மண்டல் என்பவரையும், ஐதராபாத்தை சேர்ந்த பகத் வர்மாவையும் ரூ.20 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

தோனி, டேவான் கான்வே, ருதுராஜ், ராயுடு, சேனாபதி, மொயின் அலி , ஷிவம் துபே, ஹங்கர்கேகர், பிரிட்டோரியஸ், சான்ட்னர், ஜடேஜா, துஷார், முகேஷ், பத்திரனா, சிமர்ஜீத், தீபக் சாஹர், சோலங்கி, தீக்ஷனா, ஸ்டோக்ஸ், ரஹானே, ரஷீத், நிஷாந்த் சிந்து, ஜமீசன், அஜய் மான்டால் , பகத் வர்மா ஆகியோர் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading