”முதலமைச்சரிடம் இருந்து உழைப்பை தான் பின்பற்ற விரும்புகிறேன்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பாக ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ‘கலைஞர் நூலகம்’ என்னும் நடமாடும் நூலகத்தை இளைஞர் நலன் மற்றும்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பாக ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ‘கலைஞர் நூலகம்’ என்னும் நடமாடும் நூலகத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நடமாடும் நூலகம் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட பகுதியில் வலம் வரவுள்ளது. மேலும் இந்த நூலகத்தில் திராவிர இயக்க வரலாறு, கலை, இலக்கியங்கள், போட்டித் தேர்வுகள் என பல்வேறு தலைப்புகளின் கீழ் 700 புத்தகங்கள் உள்ளன. தொடந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 50 பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்வில் இயக்குநர் கரு.பழனியப்பன், பாடலாசிரியர் யுகபாரதி, எழுத்தாளர் இமையம் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், என்னுடைய உரை சிறப்புரை கிடையாது எப்போதும் சிற்றுரைதான். முன்பெல்லாம் தொகுதிக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தேன். ஆனால் அமைச்சரான பின்னர் தமிழகம் முழுவதும் செல்ல வேண்டியுள்ளது.

அண்ணா நுலகத்தை கடந்த ஆட்சியில் என்ன எல்லாம் செய்தார்கள் என்று நமக்கு தெரியும். நம் ஆட்சி அமைந்ததும் தற்போது அதை பள்ளிக்கல்வித்துறை எடுத்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு 1.50 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டித் திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் இன்னும் 50 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறப்பு திட்டங்களை முதல்வர் தீட்டி வருகிறார்.

மக்களைத் தேடி மருத்தும் போல மக்களைத் தேடி கல்வியை கொண்டு சேர்க்கும் வகையில் நடமாடும் நூலகம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் பொதுமக்கள் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளலாம். அடிக்கடி இந்த நடமாடும் நூலகம் வாகனம் வரும் போது தேவையான நூலைப் பெற்றுக்கொண்டு. ஒரு வாரம் கழித்து திரும்பவும் வரும் போது திருப்பி கொடுத்தால் போதும். எந்த சேவைக் கட்டணமும் இதற்க்கு கிடையாது என தெரிவித்தார். இந்த திட்டத்தை தொகுதி மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

அண்மைச் செய்தி : பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49 லட்சம் கோடி

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தேன். அதற்கு அவர் சில விளக்கங்களைக் கொடுத்தார். இருந்தாலும் தமிழக மாணவர்களின் நலனை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். உழைப்பு, உழைப்பு, உழைப்பு இதுதான் நான் முதல் அமைச்சரிடம் பார்த்து வியப்பது. முதலமைச்சரிடம் இருந்து உழைப்பை தான் பின்பற்ற விரும்புகிறேன். தொடர்ந்து நாம் சனாதன சக்திகளை எதிர்க்க வேண்டும் என்ற மனநிலையில்தான் முதலமைச்சர் இருக்கிறார் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.