பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49 லட்சம் கோடி

கடந்த பிப்ரவரி மாதத்தில் 1,49,577 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாக நிதியமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) கடந்த 2017 ஜூலை மாதம் அமலுக்கு வந்தது.…

கடந்த பிப்ரவரி மாதத்தில் 1,49,577 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாக நிதியமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) கடந்த 2017 ஜூலை மாதம் அமலுக்கு வந்தது. அதன்படி ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூல் குறித்த தகவலை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :  2023ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 1,49,577 கோடி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சிஜிஎஸ்டி ரூ.27,662 கோடி ரூபாயும் மாநில ஜிஎஸ்டி ரூ.34,915 கோடியும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.75,069 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் செஸ் ரூ.11,931 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டு இதே பிப்ரவரி மாததில் 1,33,026 கோடி வசூல் ஆகியுள்ளது. நடப்பு ஆண்டு இதைவிட கூடுதலாக 12% வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ச்சியாக 12 மாதங்கள் ஜி்எஸ்.டி 1.4 லட்சம் கோடிக்கு அதிகமாக வசூலாகியுள்ளது. இவ்வாறு நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

அண்மைச் செய்தி :  இலங்கை தமிழர் ராஜன் மனுவை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிப்பட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 22,349 கோடியும் கர்நாடகாவில் 10,809 கோடியும், குஜராத்தில் 9574 கோடியும் ஜிஎஸ்டி வரி  வசூலாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பிப்ரவரி மாதத்தில் 8774 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.