பொன்னியின் செல்வன் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் பேசிய ஜெயம்ரவி மணிரத்னத்தின் 2ம் பாகத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்-1’. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் 2ம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. ‘பொன்னியின் செல்வன் -2’ படத்திற்காக பிரத்யேகமாக ஆந்தம் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த ‘பிஎஸ் ஆந்தம்’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. சிவா ஆனந்த் எழுதியுள்ள இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நபிலா மான் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது இதில், நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சியில் ஜெயம் ரவி பேசுகையில், கோவை எனது இரண்டாவது வீடு என கூறலாம். அவ்வளவு பிடிக்கும். வைப், அன்பாக பார்க்கும் மக்கள், இங்கு எந்த எதிர்மறையையும் பார்க்கமுடியாது. அவ்வளவு வைப் இருக்கிறது கோவையில்… உங்களிடமிருந்து நிறைய கற்று கொள்ள வேண்டும்.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தோடு 2வது பாகத்தை நீங்கள் ஒப்பிட்டு பாருங்கள்.
எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தபடம், எவ்வளவு தேவையான படம் என்று உங்களுக்கு புரியும். மணிரத்தினத்தின் நாயகன் இரண்டாம் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். மணிரத்தினம் படத்தின் இருவர் படம் எனக்கு பிடிக்கும் எனக் கூறினார்.







