பெண்கள் என்றாலே ரொமான்ஸ் தான்- கார்த்தி கலகல பேச்சு

பெண்கள் என்றாலே ரொமான்ஸ் தான் என பொன்னியின் செல்வன் பட முன்னோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்தி கலகலப்பாக பேசினார். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா…

பெண்கள் என்றாலே ரொமான்ஸ் தான் என பொன்னியின் செல்வன் பட முன்னோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்தி கலகலப்பாக பேசினார்.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்-1’. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் 2ம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த நிலையில்  ‘பிஎஸ் ஆந்தம்’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது இதில், நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசுகையில், கேர்ள்ஸ் தான் டூ மச் லவ், ரொமான்ஸ் என்றாலே பெண்கள். காதல் துறை அமைச்சர் பூங்குழலி, பேரழகுத்துறை அமைச்சர் நந்தினி. பெண்கள் நலத்துறையை பொன்னியின் செல்வனுக்கு கொடுக்கலாம்.

சிங்கில்ஸ் நலத்துறை அமைச்சரை நானே எடுத்து கொள்கிறேன். உருட்டு துறை அமைச்சராக நம்பி ஜெயராம் சாருக்கு கொடுத்துவிடலாம் என்று கலகலப்பாக கார்த்தி பேசினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.