அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச ஆவலாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “அமெரிக்காவும், இந்தியாவும் நட்புறவு நாடுகள். எங்கள் வர்த்தக பேச்சுவார்த்தைகள் என்பது இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையின் வரம்பற்ற திறனைத் திறக்க வழி வகுக்கும் என நான் நம்புகிறேன்.
இந்த விவாதங்களை விரைவில் முடிக்க தங்களது குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். நமது இரு நாட்டு மக்களுக்கும் பிரகாசமான, வளமான எதிர்காலத்தைப் பெற நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







