முக்கியச் செய்திகள் தமிழகம்

தொண்டர்களை சந்திக்க இருக்கிறேன்; சசிகலா கடிதம்

விரைவில் அனைவரையும் நேரில் சந்திக்க இருப்பதாக சசிகலா தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அ.தி.மு.க பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு கடிதம் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்திய பேரியக்கம் நம் புரட்சித் தலைவராலும், புரட்சித் தலைவியாலும் வளர்த்தெடுக்கபட்ட ஒரு இயக்கம் ஆகும், ஏழை, எளியவர்களின் வாழ்வு வளம் பெற உருவாக்கப்பட்ட இயக்கம். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் இயக்கத்தின் வழி வந்த என் உயிர் தொண்டர்களுக்கும், என்னை நேசிக்கும் அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்.

என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், மலர்க்கொத்து, பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்குவதை தயவு செய்து தவிர்க்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு ஏதேனும் எனக்கு செய்ய விரும்பினால், தாங்கள் வாழுகின்ற இடத்திற்கு அருகில் உள்ள ஏழை, எளியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் வயதானவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதும், தற்போது கொரோனா என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவர்களது, வாழ்வாதாரத்தை இழந்துவிட்டவர்களுக்கும், மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்தாலே அதுவே தாங்கள் எனக்கு அளிக்கும் ஒரு சிறந்த பரிசாக மனதார நான் ஏற்றுக்கொள்கிறேன்” என சசிகலா தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

கனமழை எதிரொலி; நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

Ezhilarasan

இமாச்சல பிரதேசத்தில் கனமழையால் நிலச்சரிவு: மீட்பு பணிகள் தீவிரம்

Gayathri Venkatesan

அடங்குமா, அடக்குமா? கொல்கத்தா -டெல்லி இன்று மோதல்

Halley karthi