ராகுல் காந்தியின் ரசிகனாக வந்திருக்கிறேன் – காங்கிரஸ் பேரணியில் நடிகர் சிவராஜ்குமார்

ராகுல் காந்தியின் ரசிகனாக வந்திருக்கிறேன் என காங்கிரஸ் பேரணியில் நடிகர் சிவராஜ்குமார் பேசினார். நடிகர் ராஜ்குமாரின் மகனாகிய நடிகர் சிவராஜ்குமார் இன்று ஷிவமோகா, கர்நாடகாவில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் கலந்துகொண்டார். மே 10ம் தேதி…

ராகுல் காந்தியின் ரசிகனாக வந்திருக்கிறேன் என காங்கிரஸ் பேரணியில் நடிகர் சிவராஜ்குமார் பேசினார்.

நடிகர் ராஜ்குமாரின் மகனாகிய நடிகர் சிவராஜ்குமார் இன்று ஷிவமோகா, கர்நாடகாவில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் கலந்துகொண்டார்.

மே 10ம் தேதி கர்நாடகாவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் ஷிவமோகாவில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் ”நான் ராகுல் காந்தியின் ரசிகனாக வந்திருக்கிறேன்” என நடிகர் சிவராஜ்குமார் பேசினார். மேலும் தான் அண்மையில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில் பங்குபெற்றதாகவும், தான் அந்த யாத்திரையின் மூலமாக பெரிதும் ஈர்க்கப்பட்டதாக கூறினார்.

இதனால் கர்நாடக தேர்தல் முடிவுகளில் சில மாற்றங்கள் எதிர்பார்க்கபடுகிறது. மேலும் நடிகர் ராஜ்குமார் தான் நடிப்பதில் பரபரப்பாக இருப்பதால் தேர்தல் பணியில் மும்மரமாக இருக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னால் முதலமைச்சர் பங்காரப்பா அவர்களின் மகளும் மற்றும் நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் கடந்த ஏப்ரல் 28ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. தன் மனைவியின் இந்த முடிவை தான் பாராட்டுவதாக நடிகர் சிவராஜ்குமார் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.