பீட்டர்பால் என் கணவரே கிடையாது: விளக்கம் அளித்த வனிதா விஜயகுமார்..!!

மறைந்த பீட்டர் பாலை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை எனவும், நான் அவரது மனைவி இல்லை என்றும் நடிகை வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். பல்வேறு சர்ச்சைக்கு இடையே கடந்த ஆண்டு நடிகை வனிதா,…

மறைந்த பீட்டர் பாலை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை எனவும், நான் அவரது மனைவி இல்லை என்றும் நடிகை வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

பல்வேறு சர்ச்சைக்கு இடையே கடந்த ஆண்டு நடிகை வனிதா, விஷூவல் எபெஃப்ட் இஞ்சினியரான பீட்டர் பால் என்பவரை 3-வதாக திருமணம் செய்து கொண்டார். தன்னை முறையாக விவகாரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்ததாக பீட்டர் பால் மீது, அவரது முதல் மனைவி புகாரளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து திருமணமான சில தினங்களிலேயே வனிதா விஜயகுமார் – பீட்டர் பால் இருவருக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டு பிரிந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வனிதாவின் முன்னாள் கணவரான பீட்டர் பால் உடல்நலக்குறைவால் காலமானார். இந்த செய்தி பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் நடிகை வனிதாவின் 3-வது கணவர் உயிரிழந்தார் என்ற செய்தி பரவி வைரலானது. இதனையடுத்து தற்போது மறைந்த பீட்டர் பாலுக்கும், தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என நடிகை வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், மறைந்த பீட்டர் பாலை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை, 2020 இல் நாங்கள் ஒரு சுருக்கமான உறவில் இருந்தோம், அது அதே ஆண்டு முடிந்தது. நான் அவருடைய மனைவியும் இல்லை, அவர் என் கணவரும் அல்ல. என் கணவர் இறந்துவிட்டதாக செய்தி பரப்புவதை நிறுத்துங்கள்.

நான் சட்டப்பூர்வமாக தனிமையில் இருக்கிறேன். கணவர் இல்லை. எந்த இழப்புக்கும் நான் வருத்தப்படவில்லை. நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன். இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்.

மற்றவர்களைப் பற்றி விமர்சிப்பதையோ அல்லது கிசுகிசுப்பதையோ நிறுத்திவிட்டு உங்கள் வாழ்க்கையை கவனித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் வாழவும், எதைச் செய்ய விரும்புகிறார்களோ அதைச் செய்யவும் உரிமை உண்டு என கூறியுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.