எனக்கு கல்யாணம் வேண்டாம்; திருமண நாளில் மருத்துவமனையில் அட்மிட் ஆன மணமகன்

தெலங்கானாவில் திருமணத்தில் விருப்பமில்லை என மணமகன் மருத்துவமனையில் அட்மிட் ஆன சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹனம்கொண்டாவைச் சேர்ந்த அன்வேஷ் என்பவருக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக…

தெலங்கானாவில் திருமணத்தில் விருப்பமில்லை என மணமகன் மருத்துவமனையில் அட்மிட் ஆன சம்பவம் அரங்கேறியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹனம்கொண்டாவைச் சேர்ந்த அன்வேஷ் என்பவருக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் அன்வேஷ்க்கு ஜக்தியால் மாவட்டத் தலைமையகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்திருந்தினர். இந்நிலையில் ஒரு வாரத்தில் திருமணத்தை நடத்த விரும்புவதாக மணமகள் வீட்டார் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அதே மாவட்டத்தில் உள்ள மண்டபத்தில் விழாவை நடத்த மணமகள் மற்றும் மணமகனின் வீட்டாரின் பெரியோர்கள் முடிவு செய்தனர்.

மணப்பெண்ணின் குடும்பத்தினர் வரதட்சணையாக ரூ.25 லட்சத்தை அன்பேஷுக்கு வழங்க ஒப்புக்கொண்டனர். இதில் நிச்சயதார்த்தத்தின் போது பெண்ணின் குடும்பத்தினர் ரூ.15 லட்சம் கொடுத்ததோடு, மீதி வரதட்சணையை திருமண நாளன்று தருவதாக மாப்பிள்ளை வீட்டாரிடம் கூறியுள்ளனர். ஆனால் இப்படியொரு குழப்பமான திருமண நாளை மணமகள் குடும்பத்தினர் எதிர்பார்க்கவில்லை.

திருமணத்தன்று மணமகன் தனது உறவினர்களிடம் தான் குளியலறையில் தவறி விழுந்துவிட்டேன், மயக்கமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இதனால் கவலையடைந்த உறவினர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும், தனக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அன்வேஷ் கூறினார். இதனால் மற்றொரு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் அவரை பரிசோதித்து, அவர் முழுமையாக நலமாக இருப்பதாக குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

மணமகன் உண்மையைச் சொல்லும்படி மணமகளின் குடும்பத்தினரால் கட்டாயப்படுத்தப்படும் வரை இந்த நாடகம் ஐந்து மணி நேரம் நீடித்ததுள்ளது.இறுதியாக, அந்த நபர் தனக்கு திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் இல்லை என்று கூறியுள்ளார். ஆத்திரமடைந்த மணப்பெண்ணின் குடும்பத்தினர் அந்த நபரைத் தாக்க முயன்றனர், ஆனால் மற்ற குடும்ப உறுப்பினர்களின் தலையீட்டால் சண்டை தவிர்க்கப்பட்டது. திருமணத்தை தவிர்க்க மணமகன் நடத்திய நாடகம் தற்போது பேசுபொருளாகியுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.