ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்று எனக்கு தெரியாது – ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்று எனக்கு தெரியாது என்று ஆறுமுகசாமி ஆணையத்திடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம்…

arumugasami commission

ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்று எனக்கு தெரியாது என்று ஆறுமுகசாமி ஆணையத்திடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக மக்கள் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தை கண்டறிய தமிழ்நாடு அரசு ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது. அது தொடர்ந்து இன்றுவரை 90% விசாரணைகளை ஆறுமுக ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்த ஆணையத்திடம் இதுவரை 150க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகியுள்ளனர்.

இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்திடம் இன்று முதன்முறையாக ஆஜரான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்று எனக்கு தெரியாது என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த வாக்கு மூலத்தின் போது அவர் பேசியதாவது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது? எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்ற விவரம் எனக்கு தெரியாது என்று கூறினார். தொடர்ந்து 2016 செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சொந்த ஊரில் இருந்த போது நள்ளிரவு நேரத்தில் தன் உதவியாளர் மூலம் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தெரிந்து கொண்டதாகவும், அடுத்த நாள் பிற்பகலில் அப்பல்லோ மருத்துவமனை சென்ற போது அங்கிருந்த தலைமைச் செயலாளரிடம் விவரங்களை கேட்டறிந்தேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை ஆணையம் அமைக்க கோரியது யார்? ஆணையம் அமைக்க முடிவு செய்தது என ஆறுமுகசாமி ஆணையம் எழுப்பிய கேள்விக்கு பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே ஆணையம் அமைக்கப்பட்டது என ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்த ஓபிஎஸ், ஜெயலலிதா மருத்துவமனை அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் மெட்ரோ ரயில் நிகழ்வில் கலந்து கொண்டபோது ஜெயலலிதாவை பார்த்தேன் எனவும் அதற்கு பின்னர் அவரை பார்க்கவில்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்பதை தவிர அவருக்கு இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைய கோப்பில் துணை முதலமைச்சர் என்ற அடிப்படையில் நானும் கையெழுத்திட்டுள்ளேன் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.