மத்தியில் ஆட்சியில் இருந்தபோது செல்வாக்கைப் பயன்படுத்தி நம் உரிமையை நிலை நாட்டவில்லை என்று எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு அமைச்சர் துரை முருகன் வேதனையுடன் பதிலளித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் கடந்த 18 மற்றும் 19ம் தேதிகளில் 2022-23ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதனையடுத்து இன்று காலை 10 மணியிலிருந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
மத்தியில் ஆளும் பாஜகவும் நல்லது செய்யவில்லை, ஆண்ட காங்கிரசும் நல்லது செய்யவில்லை என்று துரைமுருகன் சொன்னீர்களே, இரண்டு ஆட்சியிலும் பங்குபெற்றிருந்த நீங்கள் ஏன் உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி நம் உரிமையை நிலைநாட்டவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இந்த கருத்திற்கு கனத்த இதயத்துடன் மேகதாது விவகாரம் தொடர்பாகத் தீர்மானம் கொண்டு வந்தேன், தற்போது வெந்துபோன இதயமாகியுள்ளது வாளெடுக்க தயாராக இல்லை. திசை திருப்ப வேண்டும் என்பது போன்ற சில்மிஷங்களுக்கு இடம் கொடுக்க மாட்டேன் என்று மன வேதனையுடன் பதிலளித்தார்.







