எனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியா? – ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில்

மாநிலங்களவை உறுப்பினர் பதவி கண்டிப்பாக தனக்கு கிடையாது என்றும், அதனை தான் விரும்பவில்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி…

மாநிலங்களவை உறுப்பினர் பதவி கண்டிப்பாக தனக்கு கிடையாது என்றும், அதனை தான் விரும்பவில்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி நிறைவடைந்துள்ளதால், அதற்கான தேர்தல் ஜூன் 10-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு, ராஜஸ்தான், சத்திஸ்கர் உள்ளிட்ட 15 மாநிலங்களிலும் வேட்பாளர்ளை தேர்ந்தெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

 

தமிழ்நாட்டை பொறுத்த வரை திமுக சார்பில் 3 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு வேட்பாளர் இடம் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் மூத்த உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் களம் இறங்குவார் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், தனக்கு கண்டிப்பாக உறுப்பினர் பதவி கிடைக்காது என அவர் விளக்கமளித்துள்ளார்.

 

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில், வழக்குறிஞர் கல்யாணராமன் எழுதிய அன்னமாச்சாரி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு நூலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், பாஜக சாதி, மதம் மூலம் பிரித்தாள நினைக்கின்ரனர் என்றும் அது நடைபெறதாது எனவும் தெரிவித்தார்.மொழி, சாதி மதத்தின் பேரால் தமிழ்நாட்டை பிரிக்கமுடியாது என்றார்.

தற்போதைய திராவிட ஆட்சி நல்ல ஆட்சி. மிக சிறந்த ஆளுமை கொண்டவர் முதலமைச்சர் முக.ஸ்டாலின். எல்லாருக்கும் நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறார் என புகழாரம் சூட்டினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து திமுக குறித்து தவறான தகவல்களை சொல்லி வருவதாக தெரிவித்த அவர், அண்ணாமலைதிருவண்ணாமலை சித்தராக இருப்பவருக்கு தகுதியானர் என்றார்.

மாநிலங்களவை உறுப்பினர் பதவி கண்டிபாக தனக்கு கிடையது என்றும் தானும் அதனை விரும்பவில்லை என்றும் விளக்கமளித்தார். காங்கிரஸ் பேரியக்கம் மிக பெரிய வெற்றி பெற்று மோடியை வீட்டிற்கு அனுப்புவோம் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.