மனைவியை சரமாரியாக தாக்கிய கணவன்; காவல் நிலையத்தில் சரண்

குடும்ப தகராறில் மனைவியை சராமரியாக அரிவாளால் வெட்டிய கணவன் காவல் நிலையத்தில் சரணடந்தார். சிவகங்கை மாவட்டம், கல்லூரி சாலை இந்திரா தெருவை சேர்ந்தவர்கள் சக்திவேல் மற்றும் நம்பீஸ்வரி தம்பதியினர். சக்திவேல் அதே பகுதியில் லாரி…

குடும்ப தகராறில் மனைவியை சராமரியாக அரிவாளால் வெட்டிய கணவன் காவல் நிலையத்தில் சரணடந்தார்.

சிவகங்கை மாவட்டம், கல்லூரி சாலை இந்திரா தெருவை சேர்ந்தவர்கள் சக்திவேல் மற்றும் நம்பீஸ்வரி தம்பதியினர். சக்திவேல் அதே பகுதியில் லாரி ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார். அவரது மனைவி நம்பீஸ்வரி மாற்றுத்திறனாளியாவார். இவர்களுக்கு திவ்யஸ்ரீ என்கிற மகளும் வேல்பாண்டி என்கிற மகனும் இருக்கின்றனர்.

இந்த நிலையில் தந்தை சக்திவேலுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் சக்திவேல் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவி நம்பீஸ்வரியுடன் தகராறில் ஈடுபடுவதை வழக்கம் கொண்டுள்ளார். இதே போல நேற்று மாலை வழக்கம்போல் மது அருந்தி விட்டு தகராறில் ஈடுபட்ட நிலையில் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை அதிகரித்து வாக்குவாதம் முற்றியது.

இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி நம்பீஸ்வரியை சராமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மனைவி நம்பீஸ்வரி உயிருக்கு பயந்து கூச்சலிட்டதுடன் வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கணவன் சக்திவேல் அங்கிருந்த நகர் காவல் நிலையம் சென்று சரணடைந்தார். படுகாயமடைந்த நம்பீஸ்வரிக்கு சிவகங்கை மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.