மதுபோதையில் பணியாளர்கள்-மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் எச்சரிக்கை

மதுரை அரசு ராஜாஜி பன்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் மதுபோதையில் இருப்பதாக  புகார் எழுந்தது. இதையடுத்து, மதுபோதையில் பணிக்கு வருபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்  என்று மருத்துவமனை முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென் மாவட்டங்களில் மிகப்பெரிய…

மதுரை அரசு ராஜாஜி பன்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் மதுபோதையில் இருப்பதாக  புகார் எழுந்தது. இதையடுத்து, மதுபோதையில் பணிக்கு வருபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்  என்று மருத்துவமனை முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென் மாவட்டங்களில் மிகப்பெரிய மருத்துவமனையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்நிலையில், மதுரை அரசு ராஜாஜி பன்நோக்கு மருத்துவமனை வளாகத்திற்குள் சில
பணியாளர்கள் மதுபோதையில் பணியில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார் வந்தது.
இதனால் அடிக்கடி நோயாளிகளுக்கும் , பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம்
ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் தொடர் புகாரின் அடிப்படையில்
மதுரை அரசு ராஜாஜி பன்நோக்கு மருத்துவமனையில் மது போதையில் இருக்கும்
பணியாளர்களை கண்டறிய மருத்துவ சுவாசக் கருவி கொண்டு சோதனை செய்ய குழு
அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: கோவையில் இருந்து நாட்டின் முதல் தனியார் ரயில்!

மேலும் பணியின் போது மதுபோதையில் இருந்தால் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றச்சாட்டு நிரூபிக்கபட்டால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை
முதல்வர் ரத்தினவேல் சார்பில் மருத்துவமனை பணியாளர்களுக்கு எச்சரிக்கை
விடுத்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.