முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மனித எலும்புகள் கண்டெடுப்பு

ஆதிச்சநல்லூரில் நடந்து வரும் அகழாய்வு பணியில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2020-ஆம் ஆண்டு அறிவித்திருந்தார். அதன் முதல் கட்டமாக மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் 8 மாத காலமாக நடந்து வரும் இந்த அகழாய்வு பணியில் 70க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் சி சைட் என அழைக்கப்படும் அலெக்சாண்டர் ரியா ஏற்கனவே அகழாய்வு செய்த பகுதியில் 30 செண்டி மீட்டர் ஆழத்தில் ஒரு தங்கத்தால் செய்யப்பட்ட காதணி அண்மையில், கண்டுபிடிக்கப்பட்டது.

அண்மைச் செய்திகள்: ‘‘2500 மரத்தடி பள்ளிக்கூடங்களுக்கு 1300 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் புதிய கட்டிடங்கள்’ – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி’

இந்நிலையில், 2 முதுமக்கள் தாழியில் மனிதனின் அனைத்து எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு எலும்புகள் மட்டுமே இருந்துள்ள நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2 முதுமக்கள் தாழியில் தலை, தாடை, பல், கை, கால், முதுகு எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, பற்கள் டிஎன்ஏ பகுப்பாய்விற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உத்தரகாண்ட்: 26 பேர் பலி – விசாரணை தீவிரம்

Mohan Dass

’தொடரை ரத்து பண்ணுங்க…’பாக். அணிக்கு எதிராக கொதிக்கும் பங்களாதேஷ் ரசிகர்கள்

EZHILARASAN D

தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை; 6 மாவட்டங்களுக்கு விரைகிறது பேரிடர் மீட்பு குழு

G SaravanaKumar