தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 17ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுடன் சேர்த்து இன்று வெளியாகிறது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் tnresults.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தகவல் மையங்களிலும், அனைத்து நூலகங்களிலும் கட்டணமின்றி அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் மாணவர்கள் தங்களுடைய பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்புக்கு 9.30 மணிக்கும், 10ஆம் வகுப்புக்கு பிற்பகல் 12 மணிக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.
தமிழக பள்ளிக் கல்வித் துறை வரலாற்றில் ஒரே நாளில் 10,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியாவது இதுவே முதல்முறையாகும்.
ரிசல்ட்டை எப்படி தெரிந்து கொள்வது?
இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும், தனித் தேர்வர்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடைபெறவில்லை. கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு வகுப்புகள் தாமதமாகவே தொடங்கின.
இதனால், பொதுத் தேர்வுகள் மற்றும் இறுதித் தேர்வுகள் மே மாதம் இறுதிவரை நடைபெற்றது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 5ம் தேதி பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 8.5 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வு எழுதினார்கள். 10ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற்றது. சுமார் 9 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
-மணிகண்டன்