தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ரயில் நிலையமாக விளங்கக்கூடியது மதுரை
ரயில் நிலையம். தினமும் 60-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்லக்கூடிய இந்த
ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை மதுரை வாடிப்பட்டிலிருந்து வடமாநிலங்களுக்கு
டிராக்டர் ஏற்றி செல்லக்கூடிய சிறப்பு சரக்கு ரயிலானது, மதுரை ரயில்
நிலையத்திற்கு வந்தபோது மதுரை ரயில் நிலைய நடைமேடை மூன்றில் திடீரென
தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இதில் இருபத்திநான்கு பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் இரண்டு பெட்டிகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. அதிகாலை நேரம்
என்பதால் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம்
தடுக்கப்பட்டது. மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரை கோட்ட
மேலாளர் பத்மநாபன் ஆனந்தன் தலைமையில் தொழில்நுட்பக் குழுவினர் வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான பெட்டியை தவிர மற்ற பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் மூன்றாம் நடைமேடைக்கு வரக்கூடிய அனைத்து ரயில்களும் வேறு நடைமேடைக்கு செல்லும் வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து
ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக
ஈடுபட்டு வருகிறார்கள். இதே சரக்கு ரயில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி
செல்லூர் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.