போலி ரெம்டெசிவிர் மருந்தை கண்டறிவது எப்படி?

போலி ரெம்டெசிவிர் மருந்துகள் கள்ளசந்தையில் உலவுவதாக டெல்லி காவல்துறை எச்சரித்து அதன் புகைப்படங்களையும் வெளியிட்டு ஒரிஜினல் மற்றும் போலிக்கும் உள்ள வேறுபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தியாவில் கொரோனா அதி வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த…

போலி ரெம்டெசிவிர் மருந்துகள் கள்ளசந்தையில் உலவுவதாக டெல்லி காவல்துறை எச்சரித்து அதன் புகைப்படங்களையும் வெளியிட்டு ஒரிஜினல் மற்றும் போலிக்கும் உள்ள வேறுபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா அதி வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, பகுதி ஊரடங்கு என மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ரெம்டெசிவிர் மருந்து சிறப்பான பலனை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், இந்த மருந்திற்கான தேவை நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கோவிப்ரி என்ற மருந்தின் அட்டைப்பெட்டியில் ரெம்டெசிவிர் என குறிப்பிடப்பட்டு சந்தையில் அந்த மருந்து விற்பனை செய்யப்பட்டு வருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக, டெல்லி போலீசார் மக்களிடம் போலி ரெம்டெசிவிர் மருந்தை தற்போது பரவலாக பலரும் பயன்படுத்தி வருவது குறித்து எச்சரித்துள்ளனர். மேலும், கோவிப்ரி என்பது ஒரு போலி மருந்து என்றும் அது ரெம்டெசிவிர் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லி ஐபிஎஸ் அதிகாரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் விழிப்புணர்வு பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் போலி மற்றும் உண்மையான ரெம்டெசிவிர் மருந்துக்கும் இடையே உள்ள 6 வேறுபாடுகளை புகைப்படத்துடன் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ள தகவல்களின்படி

1.போலி ரெம்டெசிவிர் மருந்தின் அட்டைப்பெட்டியில் ‘Rx’ என்ற சொல் இருக்காது. ஆனால், ஒரிஜினல் ரெம்டெசிவிர் மருந்தின் அட்டைப்பெட்டியிலும், மருந்து பாட்டிலிலும் Rx என்ற சொல் இடம்பெற்றிருக்கும்.

2. போலி ரெம்டெசிவிரில் பெரிய எழுத்துக்கள் (capital letters) பயன்படுத்தப்பட்டு இருக்காது. குறிப்பாக, “100mg/vial, india, for use in” என குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், ஒரிஜினல் ரெம்டெசிவிர் மருந்தில், ‘100mg/Vial’, ‘India’, ‘For use in’, என்ற பெரிய எழுத்துக்கள் (capital letters) பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

3. போலி மருந்தின் அட்டைப்பெட்டியில் பொறிக்கப்பட்டிருக்கும் மருந்து குறித்த தகவல்கள் ISO விதிமுறைகளை பின்பற்றாமல் பொறிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக ஒரு வார்த்தைக்கும் மற்றொரு வார்த்தைக்கும் இடையில் ஒரே மாதிரியான இடைவெளிகள் இருக்காது.

மேலும், படத்தில் இடம்பெற்றிருப்பது போல மருந்தின் அட்டையில் நிறுவனத்தின் பெயர் மற்றும் அது குறித்த தகவல்கள் மாறுபட்ட அளவில் (alignment) பொறிக்கப்பட்டிருக்கும்

4. ஒரிஜினல் ரெம்டெசிவிரில் வார்னிங் லேபிள் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் போலி மருந்தில் நிறம் முற்றிலும் மாறுப்பட்டிருக்கும்.

5. ஒரிஜினல் மருந்தின் அட்டைப் பெட்டியில் அந்த நிறுவனத்தின் உரிமம் குறித்த தகவல் இடம் பெற்றிருக்கும். ஆனால், போலி மருந்தில் உரிமம் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருக்காது.

6. போலி மருந்தில் அதிக எழுத்து பிழைகள் காணப்படும். என குறிப்பிட்டு
அவற்றின் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.