செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அடையாளமாக தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள தம்பி சின்னம் எவ்வாறு உருவானது என்பது பற்றி தற்போது பார்க்கலாம்..
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை குக்கிராமம் வரை விளம்பர படுத்த வேண்டி உருவாக்கப்பட்ட சின்னம் தம்பி. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 44 வது
ஒலிம்பியாட் போட்டிகளுக்கான சின்னம் மற்றும் இலச்சினையை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டார். அதன் பின் அந்த சின்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தம்பி என பெயர் சூட்டினார். தமிழர் பாரம்பரியத்தில் உறவுபூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் ஒர் அரவணைப்பை ஏற்படுத்தும் பெயரே தம்பி.
அதனடிப்படையில் தம்பி சின்னத்தை தமிழர் மரபு மாறாமல் வேஷ்டி சட்டையில் வடிவமைக்க சொல்லி, அதனை செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக விளம்பரப்படுத்தும்
முயற்சியில் ஈடுபட்டது தமிழ்நாடு அரசு.
பொதுவாகவே கடந்த சில வருடங்களாகவே ஒரு விளையாட்டு தொடர் தொடங்கப்பட்டால் அதற்கு பிரத்யேகமான சின்னம் உருவாக்கப்படுவதும், அதே சமையம் அவை சிலையாக வைக்கப்பட்டு அந்த நிகழ்வை பிரபலபடுதுவது வழக்கம். அதே போல தான் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக இதற்கு முன் சின்னங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அவை சிலையாக வைக்கப்பட்டன.
அதே வழியில் தான் இப்போது தம்பி சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டு அவை சிலையாக உருவெடுத்துள்ளது. தம்பி சின்னமாக அறிமுகப்படுத்தப்பட்டது மட்டும் அல்லாமல், கை கூப்பி நிற்பது போல, வேஷ்டி மடித்து கட்டுவது போல, குடும்பத்துடன் அனைவரையும் வரவேற்பது என பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருப்பது, காண்போரை மன நிறைவடைய செய்வது தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.
– நாகராஜன்








