துணிவு படம் எப்படி இருக்கு..? – ரசிகர்களின் கருத்து

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடிகர் அஜித் நடித்து வெளியாகியுள்ள “துணிவு” திரைப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் மற்றும்…

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடிகர் அஜித் நடித்து வெளியாகியுள்ள “துணிவு” திரைப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் திரைக்கு வந்துள்ளது.

நேற்றிரவு 9 மணி முதலே ரசிகர்களின் கூட்டம் திரையரங்கஙளில் அலைமோதிய நிலையில் துணிவு திரைப்படத்தின் ரசிகர்கள் சிறப்பு காட்சிகள் தமிழகம் முழுவதும் நள்ளிரவு 1 மணிக்கு வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இது குறித்து ரசிகர்கள் தெரிவித்திருப்பதாவது..

“இப்படத்தில் நடிகர் அஜித் குமார் தனது முழுத்திறனையும் செலுத்தி  நடித்துள்ளார். முதல்பாதி முழுக்க அஜித் ரசிகர்களுக்கான ட்ரீட் , இரண்டாம் பாதி கதை நகர்கிறது”

இப்படத்தில் மைக்கேல் ஜாக்ஸன் எனும் பெயரில் நடித்துள்ள  அஜித்  அதற்கு ஏற்றவாறு  சிறப்பாக நடனம் ஆடியுள்ளார். இசை, பாடல், சண்டை காட்சிகள் என வேற லெவலில் உள்ளது” என்று தெரிவித்தனர்.

வங்கி கொள்ளை குறித்துத்தான் படத்தின் கதை என துணிவு படம் குறித்து தகவல் வெளியான நிலையில் அது குறித்து ஒரு ரசிகர் குறிப்பிடும்போது..

“இது வங்கி கொள்ளை படம் அல்ல. வங்கியை அரசியல்வாதிகள் எப்படி கையாளுகிறார்கள் என்பது குறித்து தெளிவாக தெரிவித்துள்ளனர். இப்படம் அஜித்தின் “கம் பேக்” இதைப் போன்ற படத்தைத்தான் அஜித்திடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.