விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள வாரிசு திரைப்படத்தை அப்படத்தின் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர், நடிகை ராஷ்மிகா, ஷாம் உள்ளிட்ட படக்குழுவினர் கண்டுகளித்தனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் இன்று அதிகாலை தமிழகம் முழுவதும் வெளியாகியது. இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்க, நடிகை ராஷ்மிகா மந்தனா, குஷ்பு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஷாம், எஸ்.ஜே.சூர்யா என பல திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சென்னையில் ரோகிணி தியேட்டரில் வெளியான இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். நள்ளிரவு முதலே விஜய்யின் கட்வுட், பேனர்களுக்கு மாலை அணிவித்து பாலபிஷேகம் செய்து, பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தளபதி ரசிகர்களுக்கு வாரிசு திரைப்படம் பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது.
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை சென்னை ரோகிணி திரையரங்கில் தயாரிப்பாளர் தில்ராஜூ, இயக்குநர் வம்சி, நடிகை ராஷ்மிகா மந்தனா, சாம் உள்ளிட்டோர் கண்டுகளித்தனர். அப்போது பேசிய நடிகர் சாம், நல்ல குடும்ப படத்தை வம்சி கொடுத்துள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.படத்தை பார்த்த நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு நிச்சமாக பிடிக்கும். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் என்று கூறினார்.







