’மார்க் ஆண்டனி’ படம் எப்படி இருக்கு… ஆதிக் ரவிச்சந்திரன், விஷால், எஸ் ஜே சூர்யா இவர்களோடு சில்க். கம் பேக் ஆகியுள்ளனரா இயக்குனரும் விஷாலும்… பார்க்கலாம்….
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா கூட்டணியில் இன்று மார்க் ஆண்டனி வெளியாகி உள்ளது. ஆரம்பத்தில் இப்படம் சுமாரான எதிர்பார்ப்பை பெற்றிருந்தாலும் ட்ரெய்லர் வெளியான பிறகு ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆர்வத்தையும் தூண்டி இருந்தது. வாருங்கள் படம் எப்படி உள்ளது என்று பார்க்கலாம்.
முதலில் யார் இந்த மார்க் ஆண்டனி என்று தெரிந்து கொள்ளலாம். ஆண்டனி, மார்க் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் விஷால். இதில் ஆண்டனியின் அப்பா மார்க். இதே போன்று ஜாக்கி பாண்டியன், மதன் என அப்பா, மகன என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் எஸ் ஜே சூர்யா.
தன்னுடைய அப்பா தான் அம்மாவை கொன்றான் என்றும் அவன் மிகவும் மோசமானவன் என்றும் ஜாக்கி பாண்டியனை அப்பாவாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறான் மார்க். இந்த நிலையில் அவன் கையில் டைம் டிராவல் மிஷின் கிடைக்கிறது.
அந்த மிஷின் மூலம் தன்னுடைய அப்பா மிகவும் நல்லவர் என்றும் ஜாக்கி பாண்டியன் தான் அவரை கொன்று அவரை பற்றி சமுதாயத்தில் தவறான பிம்பத்தை உருவாக்கி இருக்கிறான் என்பதையும் தெரிந்து கொள்கிறான். அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் மார்க் ஆண்டனி படத்தின் மீதி கதை.
எப்போதும் டைம் ட்ராவல் என்றால் ஹீரோ பழைய காலத்திற்கு செல்வார். அந்த மாதிரி டைம் ட்ராவல் படமாக இல்லாமல் இது phone டிராவல் செய்வது போல் உள்ளது. உதாரணமாக 1995இல் வாழ்ந்து கொண்டிருக்கும் மகன் 19 75 இல் உள்ள தனது அப்பாவை தொடர்பு கொள்கிறான்.
படத்தில் உள்ள ஹைலைட் சீன்ஸ்
வெறும் இருபது நிமிடம் மட்டுமே வரும் சில்க் ஸ்மிதாவின் காட்சிகள் படத்தில் நல்ல score செய்கிறது. ஹீரோ விஷாலாக இருந்தாலும் தான் வரும் சீன்களிலும் டயலாக்கிலும் தட்டி தூக்குகிறார் எஸ் ஜே சூர்யா. இந்த படம் தியேட்டரில் பார்க்க வரும் ஆடியன்ஸுக்கு 90களில் வெளிவந்த சினிமாக்கள் எப்படி இருந்திருக்கும் என்ற கேள்விக்கு பதிலாக இருக்கும். முற்றிலும் ரெட்ரோ கலந்த கான்செப்ட். இடைவெளி சீன் நிச்சயம் கவனம் ஈர்க்கும்.
படத்தைப் பற்றிய ஓபன் டாக்
டைம் டிராவல் போன் டிராவல் என்று சில விஷயங்கள் உள்ளடக்கியிருந்தாலும் இந்த படம் 90 மற்றும் 2 k கிட்ஸ்க்கு பிடிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு ட்ராபேக் படத்தை பார்ப்பதற்கு 70s மற்றும் 80s கிட்ஸ் வந்தால் அந்த அளவுக்கு என்ஜாய் பண்ணி பார்ப்பார்களா என்பது சந்தேகம் தான்.
மேக்கிங் ப்ராசஸ், பாடல்கள், நடிப்பு
வழக்கம்போல ஜிவி பிரகாஷ்-ன் பிஜிஎம் மற்றும் பாடல்கள் அதிரடியாக உள்ளது.
நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா, விஷால் சுனிலின் நடிப்பு அற்புதமாக இருந்தது. காமெடி காட்சிகள் வரும் கிங்ஸிலே அல்டிமேட். தீவிர அஜித் ரசிகனாக இருக்கும் ஆத்விக் ரவிச்சந்திரன் இந்த படத்திலும் சில இடங்களில் அஜித்தை மென்சன் செய்துள்ளார்.
மொத்தத்தில் இந்த படம் விஷால் மற்றும் இயக்குனர் ஆர்த்தி ரவிச்சந்திரனுக்கு மிகப்பெரிய கம் பேக்கா அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.








