ஜெயம் ரவியின் இறைவன் திரைப்படத்தின் 2-ம் பாடல் நாளை வெளியாகிறது!

இறைவன் படத்தின் 2-வது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜெயம் ரவியும் நயன்தாராவும்  மீண்டும் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் இறைவன். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வாமனன், என்றென்றும் புன்னகை,…

இறைவன் படத்தின் 2-வது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஜெயம் ரவியும் நயன்தாராவும்  மீண்டும் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் இறைவன். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கிய ஐ. அஹமது இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நரேன் விஜயலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற செப்.28 ஆம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இறைவன் படத்தின் 2வது பாடலான ‘இதுபோல’ பாடல் நாளை மாலை 5.05 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

https://twitter.com/PassionStudios_/status/1702332786705924309

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.