பொங்கல் ரேஸில் முந்துமா ‘அயலான்’? எப்படி இருக்கு திரைப்படம்?

இன்று நேற்று நாளை படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன்,  யோகி பாபு,  ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையில் இன்று வெளியாகி உள்ளது அயலான் திரைப்படம். …

இன்று நேற்று நாளை படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ரவிக்குமார் இயக்கத்தில்,
சிவகார்த்திகேயன்,  யோகி பாபு,  ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையில் இன்று வெளியாகி உள்ளது அயலான் திரைப்படம்.  இப்படம் 2018-ம் ஆண்டில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில்,  பல்வேறு காரணங்களால் தாமதமாகி 2024ம் ஆண்டில் பொங்கலை முன்னிட்டு வெளியாகியுள்ளது.  பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் அயலான் எப்படி உள்ளது என்பது குறித்து இப்பகுதியில் பார்க்கலாம்.

அயலான் திரைப்படத்தின் கதை

விவசாயத்தை இயற்கை முறையில் செய்ய வேண்டும் என விரும்பும் சிவகார்த்திகேயன். பூம்பாறை என்ற பகுதியில் தனது அம்மா உடன் வாழ்ந்து வருகிறார்.  சம்பாதிக்க வேண்டும் என சென்னை வருகிறார் சிவகார்த்திகேயன்.  ஏலியனின் துணையை வைத்து ஆபத்தான கருவியை தயாரிக்க முயற்சி செய்யும் பணக்கார கும்பல்.  இதனை தடுக்க பூமி வரும் ஏலியன்.  இந்த ஏலியனுடன் சேர்ந்து ஆபத்தான கருவியை தயாரிக்க முயற்சி செய்த கும்பலை எப்படி தடுக்கிறார் என்பது தான் படத்தின் கதை.

இந்த படத்தில் VFX தரம்.  ஏ.ஆர். ரஹ்மானின் இசை நன்றாக இருந்தாலும் அப்போ அப்போ எந்திரன் படத்தை நினைவு படுத்துகிறது.  ஏலியனுக்கு பின்னணி குரல் நடிகர் சித்தார்த் கொடுத்துள்ளார்.  இந்த குரல் பொருத்தமாக உள்ளது ரசிக்கவும் வைக்கிறது.

படம் பற்றிய அலசல்

அயலான் திரைப்படம் 2018ல் வெளியாக வேண்டிய நிலையில் கால தாமதம் இதனால் சில காட்சிகள் காலத்திற்கு மாறுபட்ட காட்சிகளாக இருக்கிறது.  இருந்தாலும் சிவகார்த்திகேயனின் நடிப்பும்,  ஏலியன் செய்யும் குறும்புகளும் படத்தை நல்ல பாதையில் நகற்றுகிறது.  தனது 2வது படத்திலேயே இயக்குநர் ரவிகுமார் இந்த அளவிற்கு சிறப்பான சம்பவம் செய்திருக்கிறார்,  வாழ்துக்கள்.  மொத்தத்தில்,  சிவகார்த்திகேயனின் படங்கள் குழந்தைகளுக்கு பிடிக்கும் என்ற வார்த்தைகளுக்கு ஏமாற்றம் ஏற்படுதிடாமல் வழக்கம் போல் அமைந்துள்ளது.

  • சுஷ்மா சுரேஷ்…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.