காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளுக்காக புது டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூச்சுத்திணறல் காரணமாக நேற்று நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை, தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் அங்கு வந்தடைந்தனர். ராகுல் காந்தி சிறிது நேரம் மட்டும் அங்கு தங்கியிருந்துவிட்டுத் திரும்பிய நிலையில், பிரியங்கா காந்தி தனது தாயாருடன் துணையாக இருப்பதற்காக மருத்துவமனையிலேயே தங்கியுள்ளார்.
சோனியா காந்தி, உடல் நலக்கோளாறு காரணமாக கடந்த ஜனவரி மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்படத்தக்கது.







