முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எப்படி உள்ளார்.? – காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சிவராமன் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் நலத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை அவர் இரண்டு
நாளில் வீடு திரும்புவார் என காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சிவராமன் நியூஸ்7
தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

இ.வி.கே.எஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றியை முன்னிட்டு 13.03.2023 அன்று டெல்லியில் உள்ள கட்சித் தலைவர்களை சந்திக்க சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார். மேலும் கட்சித் தலைவர்களை சந்தித்து விட்டு நேற்று மாலை 4.30 மணி அளவில் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னை போரூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு முன்னரே பைபாஸ் சர்ஜரி மேற்கொள்ளப்பட்டுள்ளதால் தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையும் படியுங்கள்: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை சந்தித்து
விட்டு உடல்நலம் பற்றி கேட்டறிந்த பின் செய்தியாளர்களை சந்தித்தனர். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சிவராமன் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்திருப்பதாவது..

” ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு திடீரென மூச்சு திணறல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டு ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருப்பதாக ஊடகங்களில் நாங்கள் அறிந்து இங்கு வந்தோம்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் எங்களை பார்த்து நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்
நீங்கள் உங்கள் உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள் என தைரியம் சொல்லும்
அளவிற்கு அவர் நன்றாக இருக்கின்றார். அவர் இரண்டு நாள் மருத்துவமனையில் ஓய்வு
பெற்றால் போதும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்”  என காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சிவராமன் தெரிவித்தார்.

– யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் ஐடி பார்க்

G SaravanaKumar

ஆவின் இனிப்புகளின் விலை உயர்வு

Web Editor

இந்தோனேசியா: மசூதியில் புதுப்பிக்கும் பணியின் போது தீவிபத்து

G SaravanaKumar