ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை டெல்லியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை வந்துள்ளார். அதன்பிறகு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை போரூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு முன்னரே பைபாஸ் சர்ஜரி மேற்கொள்ளப்பட்டுள்ளதால் தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்மைச் செய்தி :சாக்லேட் மூலம் உருவாக்கப்பட்ட கார் – கமெண்ட் பதிவிட்ட ஹூண்டாய் நிறுவனம்
இதுதொடர்பாக அவரது உதவியாளர் கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு நாட்களுக்கு மருத்துவர்கள் மருத்துவமனையில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாக அவருடைய உதவியாளர் கூறினார்.







