நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு

நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை…

நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கோயமுத்தூர், நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகர், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என்றும் குறிப்பிடப்படப்பட்டுள்ளது. எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் லேசான மழையும் அல்லது வறண்ட வானிலையும் நிலவக் கூடும் என்றும் சென்னை வானிலை மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.