ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் இருந்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் ஒகேனக்கல் நோக்கி சென்றுள்ளனர். அப்போது, இருசக்கர வாகனம் சாலையில் இருந்த விளம்பர பலகையின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவரின் தலை துண்டான நிலையில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தேன்கனிக்கோட்டை போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கர்நாடக மாநிலம் பெங்களூர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த வருண் காடாபால் (22) மற்றும் அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சிசுபால் சிங்(20) என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசை இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







