தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த 9 மீனவர்கள் தூத்தூரை சேர்ந்த அந்தோனிதாசனின் ரூபி என்ற விசைப்படகில் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 8ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 450 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது ஹாங்காங் லிருந்து பெட்ரோல் ஏற்றி வந்த கப்பல் மோதியது. இந்த மோதலால் படகில் இருந்த 9 மீனவர்களும் காயமடைந்தனர்.
இந்நிலையில் இந்த மோதலில் உயிர்தப்பி சிகிச்சை பெற்று வரும் அந்தோணி தாசன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், 10 அடி பின்னாடி மோதி இருந்தால் விசை படகு மூழ்கி இருக்கும் 9 பேரும் இறந்திருப்போம். கப்பல் கவன குறைவாக வருவதால் கடந்த இரு மாதத்தில் மூன்றாவது முறையாக இந்த விபத்து நடந்துள்ளன. கப்பலில் ரேடார் போன்ற தொழிநுட்ப கருவிகள் இருப்பதால் முன் கூட்டியே விசை படகு குறித்த தகவல் அவர்களுக்கு கிடைக்கும். ஆனாலும் இருந்தும் மோதி செல்கின்றனர் என்று தெரிவித்தார்.
அண்மைச் செய்தி : வங்கியை கொள்ளையடிக்க முயன்ற கலீல் ரகுமானுக்கு ஜாமீன்
மேலும் பேசிய அவர், விரைந்து மத்திய மாநில அரசுகள் இதற்கு முற்று புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.







