முக்கியச் செய்திகள் தமிழகம்

முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி – சென்னை மாநகராட்சி

80 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்த 044 2538 4520 மற்றும் 044-4812 2300 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்தால் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 13.08.2021 முதல் ஒரு வாரக் காலத்தில் 315 கோவிட் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு 24,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுநாள் வரை 25,14,228 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 10,54,704 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் என மொத்தம் 35,68,932 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் 25,97,603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து 25,43,319 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 34,663 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

மீராபாய் சானுவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

Vandhana

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை

Halley karthi

தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 24,898 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு!

Ezhilarasan