20 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெள்ளி வென்றுள்ளது.
கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்று வரும் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான (யு-20) உலக தடகள சாம்பியன்ஷிப் நடைப்போட்டியில் இந்தியா வெள்ளி வென்றுள்ளது. இந்தியா சார்பில் அமித் குமார் 10,000மீ நடைப்போட்டியில் இலக்கை 42 நிமிடம் 17.94 நொடிகளில் கடந்து வெள்ளி வென்றுள்ளார். 20 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப்பில் நடைப்போட்டியில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை என இந்திய விளையாட்டு கழகம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
🇮🇳's Amit wins 🥈in 10000m Race Walk with a time of 42:17.94 at the #WorldAthleticsU20 in Nairobi
This is the 1st time India has won a medal in Race Walking and 2 medals in a single edition of the Championships
Many congratulations Champ!#Athletics #IndianSports pic.twitter.com/YJeXduaE5x
— SAIMedia (@Media_SAI) August 21, 2021
இந்த போட்டியில் இலக்கை 42.10.84 நொடிகளில் கடந்து கென்யாவின் ஹெரிஸ்டோன் வானியோனி தங்கம் வென்றுள்ளார். இந்த பொட்டியில் கென்யா தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். முன்னதாக இந்தியா 4*400மீ ரிலேவில் வெண்கலம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.