முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பண்டிகைகள் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா தளர்வுகள் எதுவும் இல்லாமல் மீண்டும் பழைய நிலைமையில் தீபாவளி பண்டிகையை மக்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் செவ்வாய்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரிகள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் வரும் 25ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தீபாவளி பண்டிகை திங்கள் கிழமை கொண்டாடுவதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஏதுவாக செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் நவம்பர் 11ம் தேதி பணி நாளாக அனுசரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தொடர்பான இணையதள முகவரி திடீர் முடக்கம்

Web Editor

அறத்தின் பக்கம் நிற்பவரை பார்த்து பாஜகவின் B-TEAM என்பதா? – கமல்

Saravana

’இன்று நடைபெறும் அதிமுக கூட்டம் செல்லாது’ – ஓபிஎஸ்

Arivazhagan Chinnasamy