4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அதிகமாகவே இருந்தது. அதுபோல இந்தமுறை வடகிழக்கு பருவமழையும் இயல்பை…

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டை விட இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அதிகமாகவே இருந்தது. அதுபோல இந்தமுறை வடகிழக்கு பருவமழையும் இயல்பை விட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளது எனவும், வடதமிகழத்தில் இயல்பை விட அதிகமாகவும், தென்தமிழகத்தில் இயல்பைவிட குறைவாகவும் மழைபொழிய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளநிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று (அக்.14) கனமழைக்கான எச்சரிக்கையும், நாளை (அக்.15) மிக கனமழைக்கான எச்சரிக்கையும், நாளை மறுநாள் (அக்.16) அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும் (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த 4 மாவட்டங்களிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.