டெல்லியில் நாளை முதல் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை – முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால், தொடக்கப்பள்ளிகளுக்கு நாளை முதல் காலவரையற்ற விடுமுறை அறிவித்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.   தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்னை அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த…

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால், தொடக்கப்பள்ளிகளுக்கு நாளை முதல் காலவரையற்ற விடுமுறை அறிவித்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

 

தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்னை அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக காற்று மாசு தீவிரமடைந்துள்ளது. இதனை தடுக்க காற்று சுத்திகரிப்பு கோபுரம் உள்ளிட்ட சில முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது. இருப்பினும் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நொய்டா பகுதியில் காற்றின் தரம் மோசமாக உள்ளதாக அங்குள்ள 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து, டெல்லியில் உள்ள ஆயிரத்து 800 பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை எடுக்க உத்தரவு பிறப்பித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்பு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காற்றுமாசு சீராகும் வரை தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், காற்று மாசுவை குறைக்க முடிந்தவரை பொது போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.