மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணையதளம் மேம்படுத்தப்படுவதாக அறிவிப்பு

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணையதளம் மேம்படுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு, முன்னர் தனியார் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்ட…

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணையதளம் மேம்படுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு, முன்னர் தனியார் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்ட http://www.maduraimeenakshi.org என்ற இணையதளம் செயல்பட்டு வந்தது. இந்த இணையதளம் தற்போது மூடப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதற்குப் பதிலாக தமிழ்நாடு அரசின் இணையதளமான https://maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற அலுவல்சார் இணையதளம்(Official Website) உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் http://www.maduraimeenakshi.org என்ற முந்தைய இணையதளத்தை அணுகும் பயனர்கள், புதிய அலுவல்சார் இணையதளமான https://maduraimeenaksh.hrce.tn.gov.in -க்கு தானாகவே திசைமாற்றப்பட்டு, அதன் மூலம் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் திருக்கோயிலுக்கு செலுத்த விரும்பும் நன்கொடைகள், திருக்கோயிலில் நடைபெறும் உபய சேவைகளுக்கான கட்டணங்கள் போன்றவற்றை இணையதளம்
மூலம் செலுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது https://maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற அரசு இணையதள முகவரியைத் தவிர இத்திருக்கோயிலுக்கு வேறு எந்த இணையதளமும் கிடையாது என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.