மதுரையில் கொரோனா சிகிச்சை மையத்தில் உயிரிழந்த குழந்தை டெல்டா பிளஸ் பாதிப்பால் உயிரிழந்ததா என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வை தொடக்கியுள்ளனர்.
மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் அமைந்திருக்கும் ஆதரவற்றோர் பள்ளியில் இருந்த ஒரு வயது ஆண் குழந்தைக்கு கடந்த 13ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அந்த குழந்தைக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அந்த குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. மருத்துவ அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பில் இருந்த குழந்தை நேற்று உயிரிழந்தது. இதையடுத்து குழந்தை கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக சான்றிதல் அளிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், குழந்தை டெல்டா பிளஸ் பாதிப்பால் உயிரிழந்ததா என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து குழந்தையின் பரிசோதனை மாதிரிகளை புனேவிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள 110 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.