இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்காது: கே.எஸ்.அழகிரி

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “மாமல்லபுரத்தில் ஜுன் 6 மற்றும் 7ம் தேதிகளில்…

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “மாமல்லபுரத்தில் ஜுன் 6 மற்றும் 7ம் தேதிகளில் காங்கிரஸ் கமிட்டி சார்பாக சிந்தனை அமர்வு மன்றம் நடைபெறுகிறது. அதில் தமிழகத்திற்கான வளர்ச்சி திட்டம், பொருளாதாரம் குறித்து பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்” என்று தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டத்திற்கு தற்போது மீண்டும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார் என்ற அவர், “பிரதமர் மோடி தமிழகம் வருகையின் போது திருக்குறள் மற்றும் பாரதியாரின் வரிகளை மேடையில் சொல்கிறார். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில்லை. தமிழகத்தில் பல்வேறு நலத் திட்டங்களை கொண்டுவந்தது காங்கிரஸ் ஆட்சியில்தான். 8 ஆண்டுகளில் பாஜக ஆட்சி தமிழகத்திற்கு என்ன புதிய திட்டம் கொண்டுவந்துள்ளது” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது. எந்த மொழியையும் கற்றுக்கொள்வதில் தவறு இல்லை, மொழி திணிப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும். ஹஜ் பயணிகள் தமிழகத்தில் இருந்து செல்ல மறுக்கப்படுகிறது, அதை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.