முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போன், இணையம் இல்லாமல் யூபிஐ மூலம் பணம் செலுத்துவது எப்படி?

பணத்தைக் கொண்டு செலவு செய்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஸ்மார்ட்போனை வைத்து ஸ்மார்ட்டாக பணப்பரிவர்த்தனையை செய்து முடித்து விடுகிறோம்.

ஆங்கிலம் தெரிந்து விவரம் அறிந்த வயதில் பெரியவர்களும் கூட யூபிஐ மூலம் பணம் செலுத்தி விடுகின்றனர். இதற்கு கட்டாயம் ஸ்மார்ட்போனும், இணைய வசதியும் தேவை.
ஆனால், தற்போது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இணையமும், ஸ்மார்ட்போனும் இல்லாமலேயே யூபிஐ வாயிலாக பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக உள்ளது. அது எப்படி என்று பார்ப்போம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தரப்பில் கூறப்பட்டதாவது:
UPI123PAY மூலமாக சாதாரண போனைப் பயன்படுத்தியும் பணம் செலுத்த முடியும். இதை நான்கு பிரத்யேக வழிகளில் செய்ய முடியும். ஐவிஆர் எனப்படும் குரல் வழி ஆதரவு, சாதாரண போன்களில் உள்ள செயலி, மிஸ்டு கால், பிராக்ஸிமிட்டி சவுண்ட் என 4 வழிகளில் பேமெண்ட் செய்யலாம்.

ஐவிஆர் வழியாக யூபிஐ பேமெண்ட் செய்வதற்கு 080 4516 3666, 080 4516 3581 மற்றும் 6366 200 200 ஆகிய எண்களுக்கு வாடிக்கையாளர் அழைப்பதன் மூலம் இந்த வசதியைப் பெறலாம். இதில் உங்கள் மொழியையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

மிஸ்டு கால் மூலம் பேமெண்ட் செய்ய வணிகர் பரிந்துரைக்கும் எண்ணைப் பெற்று மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, உங்களுக்கு 080 71 800 800 என்ற எண்ணிலிருந்து அழைப்பு வரும். அதைத் தொடர்ந்து நீங்கள் உங்கள் UPI PIN-ஐ உள்ளீடு செய்ய வேண்டும். பேங்க் ஆஃப் இந்தியா இந்தத் தீர்வை வழங்குகிறது.

சாதாரண போனில் உள்ள யூபிஐ செயலியைப் பயன்படுத்தி நீங்கள் பேமெண்ட் செய்யலாம். இந்தச் செயலியை Gupshup நிறுவனம் ஏர்டெல் பேமெண்ட் பேங்க் உடன் இணைந்து உருவாக்கியுள்ளது.

ஒலி அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பேமெண்ட் செய்ய முடியும். Tonetag நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாம் பேமெண்ட் செய்ய முடியும். வணிகரின் சாதனத்தில் Tap செய்வதன் மூலம் இந்த பரிவர்த்தனையை செய்ய முடியும். Tap செய்த பிறகு, # ஐ அழுத்தவும். பிறகு செலுத்த வேண்டிய கட்டணத்தை உள்ளீடு செய்துவிட்டு யூபிஐ பின்னை உள்ளிட வேண்டும். இதற்கான ஒப்புதல் ஐவிஆர் அழைப்பு மூலம் பயனருக்குத் தெரிவிக்கப்படும்.
இனி ஸ்மார்ட்போன், சாதாரண போன் இல்லாமல் கூட நீங்கள் பணம் செலுத்த முடியும் தானே!

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டெல்டா வகை கொரோனா இளைஞர்களை அதிகம் தாக்கும்: ஜோ பைடன் எச்சரிக்கை

Halley Karthik

முதல்முறையாக விமானத்தில் பறந்த பழங்குடியின மக்கள்

Web Editor

தொண்டர்களின் இயக்கமாக அதிமுக மாறும் வரை உழைத்துக்கொண்டே இருப்பேன் – சசிகலா

Halley Karthik