இமாச்சலப் பிரதேச பாஜக எம்.பி. ராம் சுவரூப் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியின் பாஜக எம்.பியாக இருந்த ராம் சுவரூப் (62), மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் நிலைக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டவர்.
இந்நிலையில் இன்று காலை ராம் சுவரூப் வீட்டில் அவர் இருந்த அறை திறக்கப்படாமல் இருந்துள்ளது. அவருடைய மனைவி யாத்திரைக்கு சென்றிருந்த நிலையில் வீட்டு பணியாளர் கதவை திறக்க முயற்சித்துள்ளார். ஆனால் கதவு உட்புறம் பூட்டி இருந்த காரணத்தால் பணியாளர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
அதையடுத்து ராம் சுவரூப் வீட்டிற்கு காலை ஏழு மணியளிவில் காவல் துறை அதிகாரிகள் சம்பவம் இடத்தக்கு வந்துள்ளனர். பிறகு அவருடைய அறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது ராம் சுவரூப் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டதெரியவந்தது. பின்னர் அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இத்தகவல் அறிந்த மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் சம்பவம் இடத்திற்கு சென்றார்
ராம் சுவரூப் கடந்த ஆறு மாதங்களாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு அவர் மனைவி ஆன்மீக ரீதியான புனித யாத்திரை பயணத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த அவர் யாரும் எதிர்பார்க்காத நிலையில்உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
ராம் சுவரூப்பின் இந்த மரணம் பாஜக தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் அவர் இறப்பிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டம் ஜல்பிஹர் கிராமத்தில் ராம் சுவரூப், ஜூன் 10, 1958ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவர் மண்டி தொகுதியில் இருந்து (2014, 2016) இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.







