இந்தியாவில் கட்டப்படும் உலகின் மிக உயரமான ரயில் பாலம்!

பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் உயரத்தைவிட உலகின் மிக உயரமான ரயில் பாலம் கட்டும் பணிகள் ஜம்மு காஷ்மீரின் மாநிலத்தில் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. உலகிலேயே மிகஉயரமான ரயில் பாலத்தை ஜம்மு காஷ்மீரின் ராஸி மாவட்டம்…

பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் உயரத்தைவிட உலகின் மிக உயரமான ரயில் பாலம் கட்டும் பணிகள் ஜம்மு காஷ்மீரின் மாநிலத்தில் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

உலகிலேயே மிகஉயரமான ரயில் பாலத்தை ஜம்மு காஷ்மீரின் ராஸி மாவட்டம் பக்கால், கேரி பகுதிகளுக்கு இடையே செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுவருகிறது. இந்த பாலத்திற்கான திட்டபணிகள் கடந்த 2002-ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த பாலம் செனாப் ஆற்றின் தரை பகுதியிலிருந்து 359 மீட்டர் உயரத்திற்க்கு கட்டப்பட்டுள்ளது. இது பாரிஸில் நகரில் அமைந்திருக்கும் ஈபிள் கோபுரத்தைவிட உயரமாகும்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில் “வரலாற்று மிக்க உலகின் மிகஉயரமான பாலத்தின் தரைதள பகுதி பணிகள் நிறைவுபெற்றுள்ளது. பாலத்தின் வளைவு பணிகள் தற்போது நடைப்பெற்றுவருவகிறது. இந்த பாலத்தை அமைக்க 174 கி.மீ கொண்ட சுரங்கபாதை பணிகளில் 126 கி.மீ பணிகள் நிறைவுபெற்றுள்ளது” என அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் ரயில்வே மூலம் இணைக்கவும் பொருளாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும் என்பதே இத்திட்டதின் முக்கிய காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பாலத்தின் முழுமையான பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவுபெறவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.