முக்கியச் செய்திகள் குற்றம்

கணவனை மீட்டுத்தரக்கோரி மனைவி காவல் நிலையத்தில் புகார்!

திருவள்ளூர் அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்துவிட்டு தலைமறைவான இளைஞரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயதான கீர்த்திபா. இவர் கனகம்மா சத்திரத்தில் உள்ள எக்ஸ்போர்ட கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கம்பெனியில் சிறுவானூர் கிராமத்தைச் சேரந்த 21 வயதான ஜெபஸ்டின் என்ற இளைஞனும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களாக இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கீர்த்திபாவுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய பெற்றோர்கள் முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கீர்த்திபாவும், ஜெபஸ்டினும் கடந்த 13-ம் தேதி திருப்பாச்சூரில் உள்ள கோயிலில் திருமணம் செய்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனைத் தொடர்ந்து புட்லூரில் உள்ள பாட்டி வீட்டில் மனைவி கீர்த்திபாவை தங்க வைத்துள்ளார். பின்னர் இரு குடும்பமும் ஒன்று சேர்ந்தப் பிறகு தமது வாழ்க்கையை தொடரலாம் என தெரிவித்துள்ளார். இவர்கள் இருக்கும் இடத்தை அறிந்ததும், இளைஞரின் தாய் அப்பெண்ணை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். ஆனால் காதலன் திடீரென தலைமறைவானதால் பெற்றொரிடம் எச்சரித்து அனுப்பினர். இதனைத் தொடர்ந்து பெண்ணை மகளிர் காப்பகத்தில் தங்க வைத்தனர். மேலும், காதலன் வந்த பிறகு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம்:திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு!

Jeba Arul Robinson

பாலிவுட் நடிகர் திலீப் குமார் காலமானார்

Halley Karthik

வாரணாசி ; ஞானவாபி மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு

Dinesh A