இமாச்சலில் பயங்கரம்.. மலைப்பகுதி சரிந்துவிழும் அதிர்ச்சி வீடியோ!

இமாச்சலப் பிரதேசத்தில் மலைப் பகுதி சரிந்து விழும் வீடியோ காட்சி அதிர்ச்சி யை ஏற்படுத்தி இருக்கிறது. இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக ஆறு…

இமாச்சலப் பிரதேசத்தில் மலைப் பகுதி சரிந்து விழும் வீடியோ காட்சி அதிர்ச்சி யை ஏற்படுத்தி இருக்கிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக ஆறு மற்றும் ஏரிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளி நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இதில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சிர்மார் அருகே உள்ள மலைப் பகுதியில் திடீரென இன்று ஏற்பட்ட விரிசல் காரணமாக, ஒரு பகுதியே  பயங்கர சத்தத்துடன் சரிந்து விழுந்துள்ளது.

இதையடுத்து அந்தப் பகுதியினர் அதிர்ச்சி அடைந்து பயத்தில் தப்பியோடியுள்ள னர். இந்த வீடியோவை காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி யுள்ளார்.

https://twitter.com/srinivasiyc/status/1420988255416119301?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1420988255416119301%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dnaindia.com%2Fviral%2Freport-watch-mega-landslide-takes-away-chunk-of-mountain-road-in-spine-chilling-video-from-himachal-pradesh-landslide-sirmaur-2903381

இந்த அதிர்ச்சி வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலச்சரிவால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. இதன் காரணமாக தேசிய நெடுஞ் சாலை 707, துண்டிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.