எம்.வி.கங்கா விலாஸ் – உலகின் மிக நீளமான நதி கப்பலின் சிறப்பம்சங்கள்

உலகின் மிக நீளமான நதி கப்பலான எம்.வி.கங்கா விலாஸ் கப்பலின் சிறப்பம்சங்கள் குறித்து தற்போது காணலாம். உலகின் மிக நீளமான நதிப் பயணமான எம்.வி.கங்கா விலாஸ் 2018ஆம் ஆண்டு முதல் விளம்பரப்படுத்தப்பட்டு, 2020ஆம் ஆண்டில்…

உலகின் மிக நீளமான நதி கப்பலான எம்.வி.கங்கா விலாஸ் கப்பலின் சிறப்பம்சங்கள் குறித்து தற்போது காணலாம்.

உலகின் மிக நீளமான நதிப் பயணமான எம்.வி.கங்கா விலாஸ் 2018ஆம் ஆண்டு முதல் விளம்பரப்படுத்தப்பட்டு, 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது. இருப்பினும், கொரோனா தொற்று காரணமாக திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் என தெரிவிக்கப்பட்டது.

எம்வி கங்கா விலாஸ் நதிப்பயண கப்பல் தனது பயணத்தை உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்கி 51 நாட்கள் பயணித்து அசாமின் திப்ருகர் சென்றடையும். கங்கா-பாகீரதி-ஹூக்ளி, பிரம்மபுத்திரா மற்றும் மேற்கு கடற்கரை கால்வாய் உட்பட 27 இந்திய நதிகள் வழியாக இந்த கப்பல் பயணிக்கும். 3 தளங்கள் மற்றும் 18 அறைகள் கொண்ட இந்த கப்பலில் 36 சுற்றுலா பயணிகளின் தங்கும் வசதி கொண்டது.

இந்த கப்பலின் முதல் பயணத்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 32 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். எம்வி கங்கா விலாஸ் சொகுசு கப்பல் நாட்டின் சிறந்த திறனை எடுத்துரைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலக பாரம்பரிய இடங்கள், தேசிய பூங்காக்கள், நதிக்கரைகள் மற்றும் பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்கள் வழியாக இந்த கப்பல் செல்லும்.

இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளின் கலை, கலாச்சாரம், வரலாறு மற்றும் ஆன்மீக சுற்றுலா தலங்களையும் பயணிகள் கண்டுகளிக்கலாம். நதி வழியிலான சுற்றுலாவை மேம்படுத்துவதில், நதி பயண சொகுசு கப்பல் திட்டம் பெரிதும் ஊக்குவிக்கும் என்றும், இந்த சேவை நதி சொகுசு கப்பல் சுற்றுலாவில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.