ஏப்ரல் 16ம் தேதி நடக்கும் அதிமுக செயற்குழுவிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

ஏப்ரல் 16ம் தேதி நடக்கும் அதிமுக செயற்குழுவிற்கு தடை விதிக்க சென்னை நீதிமன்றம்  மறுப்பு  தெரிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு தொடர்பாக  ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள்…

ஏப்ரல் 16ம் தேதி நடக்கும் அதிமுக செயற்குழுவிற்கு தடை விதிக்க சென்னை நீதிமன்றம்  மறுப்பு  தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு தொடர்பாக  ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை வந்தது. ஏப்ரல் 16ம் தேதி செயற்குழு நடைபெறும் என இ.பி.எஸ். அறிவித்துள்ள நிலையில்  இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது.

அதிமுக பொது செயலாளர் தேர்தல் தொடர்பான மேல்முறையீடு வழக்கு விசாரணை  நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக்  ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சொன்ன பிறகு, இடையில் நடைக்கும் அனைத்துமே தீர்ப்பிற்கு உட்பட்டது. பிறகு ஏன் இந்த அவரச முறையீட்டு மனுவை  தாக்கல் செய்தீர்கள். அனைத்து தரப்பினரும் இறுதி விசாரணை 20 ம் தேதிக்கு ஒப்பு கொண்ட நிலையில் ஏன் முறையீடு என  நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதலளித்த ஓ.பி.எஸ் தரப்பு ஏப்ரல் 16ம் தேதி செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. கர்நாடகா தேர்தல், புதிய  உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து விவாதிக்க போன்ற காரணங்களுக்காகவே இந்த மேல்முறையீடு என தெரிவித்தனர்.

எதுவும் நடக்காது. ஆறு மாதங்களில் உறுப்பினர் சேர்க்கை முடிந்து விடாது. அவர்களின் எண்ணங்களுக்கு ஒத்துவராத உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையை  புதுப்பிக்க மாட்டார்கள்.  உறுப்பினர் சேர்க்கை மற்றும்  நீக்கம் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. எந்த இடைக்கால கோரிக்கையும் விசாரிக்கப்படாது என்பது நீதிமன்றத்தின் முடிவு. வழக்கு நேரடியாகத்தான் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

கர்நாடகா தேர்தல் குறித்தும், உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமாகவும் ஏப்ரல் 16ல் செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. கட்சி எம்.பி. , எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அழைக்கப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளவர்களில் இருவர் எம்.எல்.ஏ.க்கள் நீக்கத்தை எதிர்த்து வழக்கு நிலுவையில் உள்ளதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஓ பி எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

இதற்கு பதிலளித்த இ பி எஸ் தரப்பினர் “ பொதுச்செயலாளர் தேர்தல் முடிந்து விட்டது. பொதுச்செயலாளருக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. என்ன முடிவெடுத்தாலும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் நான்கு பேர் தான் அவர்கள் பக்கம். கட்சி நடவடிக்கைகளை நீதிமன்ற வழக்குகள் மூலம் இழுத்தடிக்கின்றனர். கட்சி தினந்தோறும் கூட்டங்களை கூட்டி வருகிறது என தெரிவித்தனர்.

பொதுச்செயலாளர் பதவியில் செயல்பட யாரும் தடை செய்யவில்லை. கட்சி செயல்படவும் தடை செய்யவில்லை என ஓபிஎஸ் தரப்பின் சார்பில் தெரிவித்தனர்.
கர்நாடகா தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கு ஏப்ரல் 20 கடைசி நாள். அதனால் தான் செயற்குழு கூட்டப்பட்டது. எந்த முடிவு எடுத்தாலும் இந்த மேல் முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என இபிஎஸ் தரப்பினர்

தற்போது உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்த வேண்டாம் என அறிவுறுத்துங்கள். ஏப்ரல் 16 ம் தேதி நடக்க இருக்கும் அதிமுக செயற்குழுவிற்கு தடை விதிக்க இயலாது. வழக்கு ஏப்ரல் 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.