முக்கியச் செய்திகள் தமிழகம்

பத்மசேஷாத்ரி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான வழக்கை முன்கூட்டியே விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் தடுப்பு சட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மசேஷாத்ரி பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபாலன். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அசோக்நகர் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

அவர் ஜாமீன் மனுவை, உயர்நீதிமன்றம் நிராகரித்தது. தொடர்ந்து ராஜகோபால் மீது புகார்கள் குவிந்த வண்ணம் இருந்ததால், அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனைவி ஆர்.சுதா, வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று அவர் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில் தனது கணவருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளதாகவும், இதனால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் எனவே இந்த வழக்கை உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.என். பிரகாஷ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கள் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

 

Advertisement:
SHARE

Related posts

சமூக நீதி, பெண்ணுரிமை பற்றி பேசும் தகுதி பாஜகவிற்கு மட்டுமே உண்டு; பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கருத்து!

Saravana

கலைவாணர் அரங்கில் சபாநாயகர் அப்பாவு ஆய்வு!

Halley karthi

உலகின் முதல் இரட்டை அடுக்கு பெட்டக மின்சார ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Jayapriya