முக்கியச் செய்திகள் தமிழகம்

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு: திமுக எம்.பிக்கு ஜாமீன்

முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராசு கொலை வழக்கில் கடலூர் திமுக எம்.பி டி.ஆர்.வி.ரமேஷ்க்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. இங்கு பணியாற்றி வந்த கோவிந்தராஜ் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக எம்பி., ரமேஷ் உட்பட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் பண்ருட்டி நீதிமன்றத்தில் அக்டோபர் 11 ஆம் தேதி ஆஜரான அவர், கைது செய்யப்பட்டு கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர், ஜாமீன் கோரி கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, ஜாமீன் கோரி அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்த வழக்கில் நவம்பர் 23 ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது: வெள்ளையன் அறிவிப்பு

Ezhilarasan

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

Nandhakumar

தமிழகத்தில் இன்று 464 பேருக்கு கொரோனா பாதிப்பு

Jayapriya