டெல்லியில் முப்படைத்தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மூப்படைத்தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 வீரர்களின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ விமானம் மூலம் டெல்லி கொண்டுசெல்லப்பட்டது.
https://twitter.com/news7tamil/status/1468971687378968587
பாலம், ராணுவ விமான தளத்தில் வைக்கப்படிருந்த முப்படைத்தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடலுக்கு பிரதமர் மோடி மலர் தூவி நேரில் அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செய்தார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் ஆறுதல் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து இறந்தவரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அவரைத்தொடர்ந்து தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவல் அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் ராணுவத்தளபதி நரவானே அஞ்சலி செலுத்தினார்.









